மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரும் பொறுப்புகூறவேண்டுமென மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும், 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 19ஆவது திருத்தச் சட்டத்தின் சாதகமான அம்சங்களை உள்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.