” அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது .” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் தற்போது நான்தான் நிதி அமைச்சர். சட்டப்பூர்வமாகவே அப்பதவியை வகிக்கின்றேன். எனது தலைமையிலான குழுவே 18 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியம் செல்லவுள்ளது.
நிதி அமைச்சு பதவியை ஏற்க நான் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஆளுங்கட்சியின் விடுத்த கோரிக்கையால்தான் அந்த பதவியை ஏற்றேன். அதன்பின்னர் எனக்கு அழுத்தங்கள் வந்தன. குடும்ப உறுப்பினர்கள்கூட, பதவி துறக்குமாறு வலியுறுத்தினர்.
பொருளாதார நிபுணர்கள்தான் நிதி அமைச்சு பதவியை ஏற்க வேண்டும் என்ற கருத்து சமூகத்திலும் நிலவியது. எனவே, தகுதியான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வழிவிட்டே நான் பதவி விலகினேன். எனினும், எவரும் அந்த பதவியை ஏற்கவில்லை. அதனால்தான் நாட்டு நலன் கருதி நான் ஏற்றேன்.” – என்றார் .