(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ பதவி விலகாவிடின் மக்கள் வீதிக்கிறங்கி ஏனையவற்றை பார்த்துக் கொள்வார்கள். குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவது அவசியமானது.
சகல கட்சிகளையும் ஒன்றினைத்தே இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தின் வியூகம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்வதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவா று குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இடைக்கால அரசாங்கத்துக்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுத்தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்காகவாவது இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்றார்.