Our Feeds


Wednesday, April 20, 2022

ShortNews Admin

மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்துள்ளோம் – சாணக்கியன்

 

மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் காலி முகத்திடல் பக்கம் சென்றால் சுவையான உணவு உண்டுவிட்டு வரலாம். சமிந்த லக்ஷான் என்ற இளைஞரின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்ததையிட்டு கவலையடைகிறேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் இந்த அரசாங்கத்தின் படுகொலையினை 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எதிர்க்கொண்டு வருகிறார்கள்.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலத்திலிருந்து பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். அளுத்கம, திகன, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தினர் இந்நிலைமையை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

அக்காலப்பகுதியில் இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தற்போது கவலையடைய போவதில்லை.

மனித படுகொலைக்கு எதிராக தற்போது சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்துள்ளோம். படுகொலைக்கு இனி இடமளிக்க முடியாது. அதற்கு மேலதிகமாக ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் ஊடாக கத்தோலிக்க மக்களும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அரசாங்கத்திற்கு படுகொலை செய்யமட்டுமே தெரியும், லசந்த விக்ரமதுங்க, ரதுபஸ்ஸ, வெலிகட உள்ளிட்ட பல படுகொலைகள், தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

படுகொலை செய்வதும், படுகொலை செய்தவர்களை விடுவித்து விடுதலை செய்வதை மாத்திரம் அரசாங்கம் நன்கு அறியும். 5 வயது பிள்ளை உட்பட 6 பேரை கொலை செய்த சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. பலர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே ஆட்சிக்கு வந்தீர்கள். விடுதலையாகியுள்ளீர்கள். தற்போது வீடு செல்லுங்கள்.

வடக்கு கிழக்கு மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதனை காட்டிலும் முக்கிய பிரச்சினைகள் காணப்படுகின்றன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். காணாமலாக்கப்பட்டோரது உறவினர்கள் 1500 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

தனது ஆட்சி காலத்தில் எவரும் மரணமடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அவரது ஆட்சியில் தான் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் தான் அதற்கு பொறுப்பு.

2018 ஆம் ஆண்டு திருட்டுத்தனமான முறையில் மஹிந்த ராஜபக்ஷவை யார் பிரதமராக்கியது. இன்று குழந்தை போல் எதிர்தரப்பினர் பக்கம் அமர்ந்துள்ளார். அவர் முதலாவதாக பொறுப்புக் கூற வேண்டும்.

இரண்டாவதாக கபுடாஸ் தொடர்பில் முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார் அவர் தான் மாதீன் மற்றும் லீ குவான்யூ தொடர்பில் குறிப்பிட்டார். தற்போது கபுடாஸ் அவ்வாறு செய்தார், இவ்வாறு செய்தார் என குறிப்பிடுகிறார்.

20அவது திருத்தத்திற்கு கையுயர்த்தும் போது கபுடாஸ் வருவார் என்று அறியவில்லையா, தற்போதை கபுடாஸ் சரியில்லை என குறிப்பிடுகிறார்.

கழுத்து பட்டி அணிந்தவர்கள் வீதிக்கு இறங்க முடியாமல் போயுள்ளது என குறிப்பிட்டார். முடிந்தால் அவர் தற்போது காலி முகத்திடலுக்கு சென்று வர முடியுமா என சவால்விடுகிறேன்.

அவருக்கு வீதியில் செல்ல முடியாது. ஆளும் தரப்பினர் எவருக்கும் வீதிக்கி இறங்கி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

பதவி விலகிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் உத்தியோக பூர்வ இல்லம், வாகனம் ஆகியவற்றை இன்றும் எவரிடமும் கையளிக்கவில்லை. ஆளும் தரப்பினர் அனைவரும் மகிழ்வுடன் உள்ளார்கள். மக்கள் மகிழ்வற்றதாக உள்ளார்கள்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பிரசன்ன ரணதுங்க பதவியேற்று குறுகிய நேரத்திற்குள் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆகவே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும். போராட்டத்திற்கு முழு அமைச்சரவையும் பொறுப்புக் கூற வேண்டும்.

ஆளும் தரப்பின் முன்னாள் பிரதம கொறடாவிற்கும், தற்போதைய பிரதம கொறாடாவிற்கும் எவ்வித வேறுப்பாடுமில்லை.

ஒருவரை கொன்று 300 பேரை காப்பாற்றியுள்ளோம் என அமைச்சர் குறிப்பிடுவதை நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ள நிலையில் வரி கொள்கையினை மாற்றியமையுங்கள். வருமானத்தை அதிகரித்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள்.

கொரோனா படுகொலையையும் மறக்க போவதில்லை. வடக்கு மற்றும் கிழக்க மாகாணத்தில் கொல்லப்பட்டவர்கள் குறித்தும் கதைக்க வேண்டும்.’ எனத் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »