(இராஜதுரை ஹஷான்)
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எந்த மொழியில் விளங்கப்படுத்துவது என அறிய முடியாதுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வெறுக்கத்தக்கதாக உள்ளது என பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்லை. நாட்டு மக்கள் முன்வைக்கும் கோரிக்கை மற்றும் அவர்களின் அபிலாஷை குறித்து அரசாங்கம் பொருத்தமான தீர்மானங்களை இதுவரை முன்னெடுக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
நாட்டு மக்கள் எதிர் கொண்டு எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு எந்த மொழியில் விளங்கப்படுத்துவது என்பது தெளிவற்றதாக உள்ளது.பிரச்சினைக்கு சிறந்த முறையில் தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது என்ற காரணத்தினால் விரைவில் பதவி விலகவுள்ளேன் என்றார்.