Our Feeds


Saturday, April 16, 2022

ShortNews Admin

காலிமுகத்திடலில் குவிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்கள் அகற்றப்பட்டன.



காலிமுகத்திடல் போராட்டம் இடம்பெறும் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன.


கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் இன்று (16) அதிகளவிலான பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டங்களின் எவ்வித வன்முறை சம்பவங்களும் பதிவாகாதமை காரணமாக இதுவரை குறைந்தளவு பொலிஸ் பிரசன்னமே காணப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »