அண்மையில் பாராளுமன்றில் சுயாதீனமான விமல் , கம்மன்பில அணி ஐக்கிய மக்கள் சக்தி உடனான பேச்சு வார்த்தை வெற்றியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் பாராளுமன்றில் சுயாதீனமான குழு சார்பில் விமல் வீரவன்ச , உதய கம்மன்பில, தயாசிரி ஜயசேகர, டிரான் அலஸ் ஆகியோரும். ஐக்கிய மக்கள் சார்பில் ரஞ்சித் மத்தும்பண்டார, ராஜித சேனாரத்ன, ஹர்ஷ டி சில்வா , கயந்த கருனாதிலக, எரான் விக்ரமரத்ன உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்பட்டது.
குறித்த சந்திப்பில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்பது மற்றும் இடைக்கால அரசு அமைப்பது தொடர்பிலும் இரு தரப்பு இணக்கப்பாட்டிற்கு வந்திருப்பதாக கூறப்பட்டது.