Our Feeds


Friday, April 22, 2022

ShortNews Admin

நாமல் ராஜபக்ஷவுக்கு இருக்கும் சொத்துக்களின் விபரம்

 

தமது சொத்துக்களை கணக்காய்வு செய்து அதன் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று (21) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

தாம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 12 வருட காலப்பகுயில் அரசியல் மூலம் முறைகேடான விதத்தில் பணம் சம்பாதித்திருந்தால் அதுபற்றி உலகின் எந்தவொரு நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யுமாறும் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.

தனது அல்லது குடும்பத்தை சேர்ந்தவர்கள் முறைகேடாக திரட்டிய சொத்துக்கள் உலக நாடுகளில் இருக்குமாயின் அது தொடர்பில் வழக்கு பதிவு செய்யுமாறு சுட்டிக்காட்டிய அவர், 2015 ஆம் ஆண்டும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »