Our Feeds


Friday, April 8, 2022

Anonymous

ஒரு சிலரது தவறான தீர்மானங்களினால் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம் - அலி சப்ரி

 





(ஆர்.யசி, இராஜதுரை ஹஷான்)


நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்நிலையில் ஸ்திரத்தன்மையை பேணினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து மீள முடியும். அரச முறை கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட்டு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என நிதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இன்று (08) நடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தற்போதய நெருக்கடியான சூழ்நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்கவும், பிரச்சினைக்கு தீர்வு காணவும் எதிர் தரப்பினர் தயாராகவில்லை. ஆகவே இது அரசியல் செய்யும் தருணமல்ல.

சிறந்த நோக்கத்துடன் ஜனாதிபதி நாட்டை நிர்வகித்தார். ஒரு சிலரது தவறான தீர்மானங்களினால் நெருக்கடி நிலையை ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். தீர்மானமிக்க சூழ்நிலையில் எம்மால் சுயநலமாக செயலாற்ற  முடியாது. ஜனாதிபதிக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »