அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்யவிருந்தபோதும் அது அடுத்தவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 15 பேருடன் வரையறுக்கப்பட்டிருந்தது.அத்துடன் அதில் நாமல் ,பெசில் ,சமல் ,சஷீந்திர ஆகிய ராஜபக்சமார் உள்ளடக்கப்படவில்லை. அமைச்சரவை பதவியேற்க சுபநேரமின்மை காரணமென சொல்லப்பட்டாலும் அமைச்சரவை பதவியேற்பு ஒத்திவைப்புக்கு வேறு காரணங்கள் இருக்கலாமென சொல்லப்பட்டது.
அமைச்சரவை 15 பேருடன் வரையறுக்கப்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்துள்ள ஆளுந்தரப்பின் மூத்த அரசியல் பிரமுகர்கள் ,அரசிலிருந்து வெளியேறலாம் என்ற அச்சத்தில் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதேவேளை அரசாங்கத்துக்கு எதிராக ,எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருப்பதால் , அமைச்சரவை பதவியேற்பு மேலும் தாமதமாகலாமென தெரிகிறது.