திருவொற்றியூரில் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென்று மயங்கி விழுந்தார்.
மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக தொண்டர்கள் அம்பியூலன்ஸ்க்கு தூக்கிச் சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூர் அண்ணாமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்புப் பகுதிகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சீமான் அங்கு சென்றார். அப்போது அவர்களிடம் பேசிவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு சற்று நேரம் அங்கு நின்று கொண்டிருந்த சீமான், திடீரென மயங்கி கீழே சரிந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். இதையடுத்து, அம்பியூலன்ஸ் ஊடாக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.