நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால நிலைமையை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், மக்களின் இறையான்மையின் அம்சங்களான அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு மற்றும் அரச அதிகாரிகள் மீறாமல் இருக்கின்றனர் என்பதனையும் உறுதிப்படுத்த வேண்டும் என அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.