பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்றக் குழுவின் விசேட கூட்டம் இன்று (21) முற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
அதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில் அரசாங்கம் அதற்கு வலுவாக முகம்கொடுக்க வேண்டுமெனவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கம் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமெனவும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் யோசனையொன்றை முன்மொழிந்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித் அதனை வழிமொழிந்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.