அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நாடளாவிய போராட்டத்திற்கு ஆதரவாக புறக்கோட்டையில் உள்ள சில மொத்த விற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
4ஆம் மற்றும் 5ஆம் குறுக்குத் தெருக்களில் உள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்காரணமாக புறக்கோட்டை பகுதியில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைவடைந்துள்ளதையும், சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாதிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.