அரசை பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை மேதின நிகழ்வுகளை நடத்துவதில்லை என்றும் அதற்கு பதிலாக அரசை ராஜினாமா செய்யும்படி வலியுறுத்தி நாடு முழுவதும் தொகுதி மட்டத்தில் போராட்டங்களை நடாத்தவும் சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளது.