3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவுடன் கூடிய கப்பல் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 8.30 மணியளவில் இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நாளை முதல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.