அடுத்த வாரம் முதல் பால் மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டொலரின் மதிப்பு அதிகரித்தமையே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் அனைத்து இருப்புகளும் தற்போது தீர்ந்துவிட்டன.
இரண்டு வாரங்களாக புதிய இருப்புக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை.
அடுத்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட பால் மா தொகை இலங்கைக்கு கொண்டுவரப்படும்.
இந்த சரக்கு வந்தவுடன், டொலரின் பெறுமதியைக் கருத்தில் கொண்டு விலையைக் கணக்கிட்டு பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.