இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கி ஆளுனர் நந்தலால் வீரசிங்கவுடன் இன்று ஒரு சிறப்பான சந்திப்பு இடம்பெற்றதாக தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் Hartwig Schafer தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஆதரவளிப்பதற்கும், பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.