வெளிநாட்டுக் கடன் மீள்செலுத்துகைகளை தற்காலிமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.
எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவு அந்நிய செலாவணி தேவையான நிலையில், இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் மீள்செலுத்துகைகள் சவாலானதாகவும், சாத்தியமற்றதாகவும் உள்ளது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.