(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டிலுள்ள அனைத்துப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் (உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை) தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை, எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள முடியுமானவாறு செயற்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரட்ன உத்தரவிட்டுள்ளார்.
சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தமது கடமை நேர உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிகளை செயலிழக்கச் செய்து அல்லது சப்தம் கேட்கா வண்னம் செயற்படுத்தி வைப்பது அவதானிக்கப்பட்டுள்ள நிலையிலேயே பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.