ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்
போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்தே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.