முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் குழுவை அங்கத்துப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய இன்னல்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை.