நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் அரசாங்க தரப்பிலேயே உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகமான நாடாளுமன்ற உறுப்பினர் சாகல காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் உட்பட அரசாங்கத்தை பதவி நீக்க தேவையான 113 பெரும்பான்மை பலத்துக்குப் பதிலாக தற்போது 120 பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றில் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ள நிலையிலேயே சாகல காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.