மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின் சமிக்ஞை கட்டமைப்பு செயற்படுவதற்கு மின்கலம் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் மின் துண்டிப்பு நீண்ட நேரம் இடம்பெறுமாயின் இந்த மின் சமிக்சை கட்டமைப்பு சிலவேளைகளில் செயற்படாது.
இதன் காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறும் சநதர்ப்பங்களில் இவ்வாறான ரயில் கடவைகளின் ஊடாக செல்லும் பொழுது மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்களை புகையிரத திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.