உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹஷீம் பயன்படுத்தி வாகனத்தை முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவொன்றை சுட்டிக்காட்டியே அவர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாகவும், அவ்வாறானதொரு வாகனத்தை தான் பயன்படுத்தவில்லை எனவும் சரத் வீரசேகர எம்.பி குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, வழக்கு விசாரணைகளில் இருக்கும் ஒரு வாகனத்தை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வாறு பயன்படுத்தலாம் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து சபையில் சிறிது நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.