ரம்புக்கண சம்பவத்தின் போது எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகக் கூறப்படும் நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை நேற்றிரவு பின்னவலயில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, குறித்த சந்தேக நபர்ட கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இவரை இன்று (23) கேகாலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியிருந்தனர்.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷனின் வீட்டுக்கு அருகாமையில் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது