இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதியுடனான
பேச்சுவார்த்தை வெற்றியடைந்துளள்தாகவும் புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இடைக்கால அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதிக்கும்,11 கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான இன்று (29) நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையிலேயே இந்த இணக்கத்தை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
புதிதாக ஸ்தாபிக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவையின் நியமனம் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.