அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.