அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் போது புனர்வாழ்வு அமைச்சுக்கு நெதர்லாந்து அரசாங்கம் வழங்கிய வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் இன்று(29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.