அரசாங்கத்தில் இருந்து விலகிய விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவையை நியமிப்பதற்காக, பதவி விலகுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவரும் அண்மையில் அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர், நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை (10) இரவு இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது, 41 பேர் கொண்ட சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் பிரதிநிதிகள், பிரதமரை நீக்கி புதிய பிரதமரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.
அவர்களின் கோரிக்கையையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.