நாட்டில் இன்றைய தினம் 8 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் F வரையான வலயங்களில் காலை 8மணிமுதல், நண்பகல் 12மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும்,
மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும், இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
G முதல் L வரையான வலயங்களில் மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும்,
இரவு 10.30 முதல் நள்ளிரவு 12 மணிவரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
P Q R S வரையான வலயங்களில் காலை 8 மணிமுதல் மதியம் 12 மணி வரையான காலப்பகுதியில் 4 மணிநேரமும், மாலை 4 மணிமுதல் இரவு 7 மணி வரையான காலப்பகுதியில் 3 மணிநேரமும்,
இரவு 9 மணிமுதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் ஒன்றரை மணிநேரமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்க வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவிடக் கோரி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
மக்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்விநியோகத்தை பெற்றுக்கொடுப்பதற்காக, அந்த ஆணைக்குழு குறித்த மனுவை நேற்று தாக்கல் செய்தது.
அந்த மனுவில், பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை, வலுசக்தி மற்றும் நிதியமைச்சு என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.