எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து காலி-மாத்தறை வீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக மீனவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது தென்மாகாண ஆளுநர் செயலகத்தை நோக்கி பேரணியாக செல்வதாகவும் அறியமுடிகிறது.
போராட்டம் காரணமாக காலி நகருக்கு அருகாமையில் உள்ள பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.