(எம்.மனோசித்ரா)
மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இனவாத செயற்பாடோ அல்லது பயங்கரவாத செயற்பாடோ அல்ல. இவ்வாறு இனவாத கருத்துக்களை வெளியிடுவதால் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்பதால் , அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தீர்வை வழங்குவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளமையினால் , அந்த பொறுப்பை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக கட்சி பேதமின்றி , தேசிய இணக்கப்பாட்டுடன் நாம் செயற்பட வேண்டியுள்ளது என்றும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிரிஹான சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.