ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் காலிமுகத்திடல் போராட்டத்துக்கு கத்தோலிக்க சபை ஆதரவு வழங்கியுள்ளது.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கத்தோலிக்க சபையும் இருக்கின்றது என்று மேற்படி சபையின் ஊடகப்பேச்சாளர் வண பிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க சபையும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் பின்னணியில் இருக்கின்றது எனவும், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் எதுவித மதம் சார்ந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்க போவதில்லை என்றும் வணபிதா சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
அதேவேளை , உயிர்த்த ஞாயிறு மத அனுட்டானங்களை காலிமுகத்திடல் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இடத்தில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது என சமூக வலைத்தளங்களில் வெளிவந்த செய்திகளை கத்தோலிக்க சபை நிராகரித்துள்ளது.