சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலை சராசரி விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி 315 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 215 ரூபாயாகவும், கத்தரிக்காய் ஒரு கிலோ 265 ரூபாயாகவும், சிவப்பு வெங்காயம் கிலோ 325 ரூபாயாகவும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 295 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் நேற்றைய தினம் மீன்களின் விலை பாரிய அளவு அதிகரித்து காணப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஒரு கிலோ கிராம் கொப்பரா 1,600 ரூபாயாகவும், தோரா ஒரு கிலோ 2,000 ரூபாயாகவும், தலபத் ஒரு கிலோ 1,250 ரூபாயாகவும், பலயா ஒரு கிலோ 550 ரூபாயாகவும், சாலயா ஒரு கிலோ 280 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.