ஜே.ஏ.ஜோர்ஜ்
நேற்றைய தினம் மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இதன்போது, அங்கு ஜனாதிபதி இருந்தாரா என்பது தொடர்பிலான தகவல்களை தன்னால் வெளியிட முடியாது என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச தலைவர்களின் பாதுகாப்பு குறித்தது என்பதால் அவர்களில் நடமாட்ட விடயங்களை பொதுவெளியில் வெளியிடுவது உசிதமல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.