இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையில், இரும்பு கொள்வனவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு தற்போது பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அரசுக்கு ஆதரவான பலர் இருப்பதாக தெரியவருகிறது.
இந்த கடன் தொகையில் ஏற்கனவே 250 மில்லியன் டொலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளதோடு, தற்போது 750 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.