Our Feeds


Monday, April 4, 2022

Anonymous

”அமைச்சர்கள் பதவி விலகியது போலியான நாடகம்” – அரசியலமைப்பை தெளிவூட்டினார் சாலிய பீரிஸ்

 





அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி வசமே கையளிக்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.


எனினும், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்தமையானது, முறையற்ற செயற்பாடு என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியிடமே பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டுமே தவிர, பிரதமரிடம் கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், அரசாங்கத்திற்குள் தற்போது காணப்படுகின்ற நிலைமையை தெளிவூட்டுவது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பொறுப்பு எனவும் சாலிய பீரஸ் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் நிச்சயமற்ற தன்மை நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்து வருவதாகவும், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, ​​இவ்வாறான நிச்சயமற்ற நிலையை சில நாட்களுக்கு ஒத்திவைப்பது பொருத்தமான நடவடிக்கையல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் நேற்றைய தினம் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்திருந்ததாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »