(இராஜதுரை ஹஷான்)
மிரிஹான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடிப்படைவாத குழுக்கள் என குறிப்பிடுவதாயின் அரசாங்கத்துக்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் அனைவரையும் அடிப்படைவாதிகள் என குறிப்பிட வேண்டும். ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயத்துக்கு நாட்டு மக்கள் தற்போது மதிப்பளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் தங்களின் ஊடக அடையாள அட்டையை பாதுகாப்பு தரப்பினருக்கு காண்பித்த நிலையிலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்துக்கு பாரிய நெருக்கடியை இனி ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டார்.
என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மிரிஹான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடிப்படைவாத குழுக்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்