ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிபுன ரணவக்க இன்று (ஏப்ரல் 16) பிற்பகல் அப்பகுதியிலுள்ள வீடொன்றுக்கு சென்ற போது இளைஞர்கள் குழுவொன்று கத்தி கூச்சலிட்டு அவருக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஊர்பொக்க, ஹீகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், போராட்டத்தை அடுத்து அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.
குறித்த இளைஞர்கள் எம்.பி.யை “திருடன்” எனக் கூறி அவருக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.