சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை 2,500 ரூபாவால் அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்திருந்தது.
எனினும், அந்த விலை அதிகரிப்பை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கவில்லை என அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதன்படி, பழைய விலைக்கே 12.5 கிலோ கிராம் நிறைக் கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படுகின்றது.