அமைச்சர்கள் இல்லாவிட்டாலும் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அனைத்து அமைச்சு செயலாளர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று (12) இடம்பெற்ற அமைச்சரவை மற்றும் அரச அமைச்சுக்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.