மிரிஹானையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு (31) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உக்கிரமடைந்தபோது, படைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று வந்தது.
போராட்டத்தின் உச்சத்தில், அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது. அதன்பின்னர், சில வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.
போராட்டகாரர்களில் ஒருவரே பஸ்ஸூக்கு தீ வைத்தார் என்றும் கூறப்பட்டது. எனினும், போராட்டத்தை குழப்பி திசைதிருப்பவே பஸ்ஸூக்கு தீ வைக்கப்பட்டது என்றும் சூழ்ச்சிகாரர்களே இவ்வாறு செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றது.
எனினும், பஸ்ஸின் பின் டயருக்கு தீ மூட்டும் ஒருவர் தொடர்பில் புகைப்படம் வெளியாகியுள்ளது.