முஷர்ரப், அலி சப்ரி ரஹீம், இஷாக் ரஹ்மான் ஆகிய கயவர்களுக்கு என்னையும் என் கட்சியையும் நம்பி வாக்களித்த மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். அவர்களை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி யுமான ரிஷாத் பதியுத்தீன் இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
கோட்டா இனவாதத்தை மூலதனமாக வைத்து ஆட்சிக்கு வர முனைகிறார். எனவே அவருக்கு வாக்களிக்காமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுத்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரான நான், முஷர்ரப், இஷாக் ரஹ்மான் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டோம்.
இப்படி போட்டியிட்டு வெற்றிபெற்ற என் கட்சிக்காரர்களை நான் சிறையிலிருக்கும் போது 20ம் திருத்தத்திற்கு வாக்களிக்க இந்த அரசு பயன்படுத்திக் கொண்டது.
இப்போதும் வெட்கமில்லாமல் என் கட்சிக் காரர்களை வைத்து அமைச்சுப் பதவி கொடுக்கிறீர்கள். அவர்களும் வெட்கமில்லாமல் அந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கோட்டா ஆகாதவர் என்று சொல்லித்தான் மக்களிடம் வாக்குக் கேட்டு வந்தார்கள்.
இந்தக் கயவர்களுக்கு என்னையும் என் கட்சியையும் நம்பி வாக்களித்த மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்கிறேன். அவர்களை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.