நாம் மிகவும் நெருக்கடியான நிலைமையில் இருப்பதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்நிலை ஊடாக ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்,
“நாங்கள் பயணிக்கும் கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து புயலில் மாட்டிக்கொண்டுள்ளது. நீங்கள் அந்த கப்பலின் கேப்டனுடன் கோபம் என்றால் உடனே அந்த கப்பலை மூழ்கடிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் நாமும் நீரில் மூழ்கி இறந்துவிடுவோம். கப்பலில் பயணிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து மெதுவாக அந்த கப்பலை பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர வேண்டும். அதன் பிறகே கேப்டனுடனான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்”-என்றார்.
இது போலவே தற்போது நமது நாட்டிலும் பிரச்சினை உருவெடுத்துள்ளது. ஜனாதிபதியுடன் பிரச்சினைகள் இருக்கலாம் ஆனால் அவற்றை காட்ட வேண்டிய நேரம் இதுவல்ல, இது பழிவாங்கும் நேரம் இல்லை. இப்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள நமது நாட்டை மீட்டெடுக்க போராடுவோம் என்று நீதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.