கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த N 750 GF தனியார் ஜெட் விமானத்திலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 10.40 மணிக்கு பெசில் சென்ற விமானம் டுபாய்க்குப் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தற்போது இலங்கையில் இருந்து டுபாய்க்கு விமானங்கள் இல்லாத காலம் இது என்று விமானிகள் கூறுகின்றனர்.
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக பொய்யை பரப்பிய பசில் லங்கா மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருந்தார் எனவும் தற்போது அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த செய்தி முழுமையாக உண்மைக்கு புறம்பானது என இலங்கை பத்திரிகை சபையின் தலைவரும், பஷில் ராஜபக்ஸவின் நெருக்கமானவருமான மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.