(இராஜதுரை ஹஷான்)
என் வாழ்வில் இது போன்று மக்களை துயரத்துக்குள்ளாக்கிய ஆட்சியை கண்டதுமில்லை, கேள்விப்படவுமில்லை. இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும், முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என பாடகி நந்தா மாலினி தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக இளைஞர்களினால் தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுத்துவரும் போராட்டத்தில் இன்று (12) கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு கேவலமானதும் மக்களை துயரத்திற்குள்ளாக்கிய ஆட்சியை ஒருபோதும் கண்டதுமில்லை , கேள்விப்பட்டதுமில்லை. அதேபோல் இளைஞர்களின் தன்னிச்சையான போராட்டத்தையும் நான் கண்டதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.