இந்நிலையில் ரஷ்யாவிற்கெதிரான போரில் சளைக்காது தொடர்ந்து தமது எதிர்ப்பாற்றலை வெளிப்படுத்தி வரும் உக்ரைன் படையினரை போற்றிப் புகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையிலான பேச்சு வார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் மேலதிக இராணுவ பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் உக்ரைனுக்கு அமெரிக்க இராணுவத்தினரை அனுப்புவதற்கு முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை செய்திகள் தெரவிக்கின்றன.
இதேவேளை, ரஷ்யா பிற நாடுகளிலிருந்து இராணுவத்தினரை இறக்குமதி செய்கின்றது என்பதை உக்ரைன் பாதுகாப்பு துறை தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது அமெரிக்க இராணுவம் உக்ரைன் நிலப்பரப்பில் கால் வைப்பதானது மேலும் பாரிய அழிவுகளையும் இன்னுமொரு உலக யுத்தத்தை நோக்கிய நகர்வுகளை ஏற்படுத்தும் என சர்வதேச அவதானிகள் தெரிவிக்கின்றனர்.