அலரி மாளிகை அருகே இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற பொலிஸார் முன்வைத்த கோரிக்கை நீதிமன்றத்தினால் நிரகரிக்கப்பட்டுள்ளது
கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷ கெக்குணவல பொலிஸாரின் இந்தக் கோரிக்கையை இன்று (25) நிராகரித்தார்.
போராட்டங்களில் ஈடுபடுவோர்,பொதுமக்களுக்கு இடையூறாக செயற்படுவர்களாயின் அது தொடர்பில் பொலிஸ் அதிகாரத்தை பயன்படுத்தி அதனை சமநிலை செய்ய முடியும் என சுட்டிக்காட்டிய நீதிவான், போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் தொடர்பில் உறுதியான பெயர் விபரங்கள் கூட இல்லாமல் முன்வைக்கப்படும் கோரிக்கையை தம்மால் ஏற்க முடியாது என சுட்டிக்காட்டி பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்தார்.