பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை சட்ட ரீதியாக நீடிக்க முடியாது என சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்தது.
இராணுவத்தளபதிக்கு வழங்கப்பட்ட சேவைக்கால நீடிப்பு தொடர்ந்து அமுலில் இருப்பதாகவும், இந்த சேவைக்கால புதுப்பிப்பு கடந்த 2021.12.31 முதல் அமுலாகி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.